Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள்

நோக்கங்கள்

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம் மூலமாகவும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கமுடைய மாகாணச் சபைகள் சட்டம் மூலமாகவும் அளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம்,

  • மாகாணச் சபைகளுக்கான யாப்புகளை ஆக்கும் பணிகள்
  • சபையின் தீர்மானங்கள், குழுக்களின் தீர்மானங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் தீர்மானங்களை அமுலாக்குதல்,
  • மாகாணச் சபையின் தலைவர், பிரதித் தலைவர் மற்றும் மாகாணச் சபை உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளைச் செலுத்துதலும் தேவையான வசதிகளை வழங்குதலும்,
  • இந்த அலுவலகத்தின் நிர்வாக, கணக்கு மற்றும் கொடுப்பனவுச் செயற்பாடுகளைப் பேணி வருதல்.

பணிகள்

  • மாகாணச் சபைக் கூட்டத்தை நடாத்துதல்.
  • ஒவ்வொரு மாதமும் இரு தடவை மாகாணச் சபைக் கூட்டத்திற்கான அழைப்பு விடுத்தலும் அதனை நடத்தும் பொருட்டு நிகழச்சி நிரலை உள்ளடக்கிய அதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்தலும்.
  • மாகாணச் சபைக் கூட்டங்களில் உத்தியோகபூர்வ அறிக்கைகளைத் தயாரித்து அவற்றை கௌரவ மாகாணச் சபை உறுப்பினர்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்தல்.
  • மாகாணச் சபைக் கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களையும் பிரேரணைகளையும் ஏற்புடைய அமைச்சர்களுக்கு அனுப்பி வைத்தல்.

ஊவா மாகாணச் சபையின் நடவடிக்கை விதிக் கோவைக்கிணங்க நிறுவப்பட்டுள்ள குழுக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

  1. மாகாண நிதியத்தின் கணக்குக் குழு
  2. உத்தேச யாப்பு மற்றும் விதிகள் பற்றிய குழு
  3. சபை அலுவல்கள் பற்றிய குழு
  4. நடவடிக்கை விதிக் கோவை பற்றிய குழு
  5. மாகாணச் சபையின் அலுவல்கள் பற்றிய குழு
  6. பொது வசதிகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
  7. பொது மனுக்குழு

இக்குழுக்கள் மத்தியில் சபை அலுவல்கள் பற்றிய குழு ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக இரண்டு தடவைகள் கூடும். ஏனைய குழுக்களுக்கு சந்தர்ப்பத்திற்கேற்ற வகையில் அழைப்பு விடுக்கப்படும். இங்கு குழு மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கிணங்க எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இக்குழுக்கள் மத்தியில் மாகாண நிதியங்கள் பற்றிய கணக்குக் குழுவின் கருமங்கள் பிரபல்யமும் விரிவானவையுமாகும்.

  1. ஒவ்வோராண்டிலும் கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் இந்த மாகாணச் சபை தொடர்பில் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கைகளை சபாபீடத்தில் சமர்ப்பிக்க ஆவன செய்தல்.
  2. அந்தந்த நிறுவனங்களிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொள்ளல்.
  3. குழுவிற்கும் கணக்காய்வுப் பிரிவுக்கும் சமர்ப்பித்தல்
  4. குழுவில் கலந்துரையாடச் செய்வித்தல் வேண்டும்.
  5. குழு மேற்கொள்ளும் தீர்மானத்திற்கேற்ப மீண்டும் பதில்களைப் பெற்றுக் கொள்ளல், பூர்வாங்க விசாரணைகளை மேற்கொள்ளல் அத்துடன் தீர்மானங்களை ஏற்புடைய நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாகாணச் சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விடயத்துறையிலே சம்பந்தப்பட்ட அமைச்சினால் தயாரித்து சமர்ப்பிக்கப்படுகின்ற சாசனத்தின் விடயத்துறையுடன் தொடர்புடையதாவென ஆராய்ந்து அவற்றை சபைக்குச் சமர்ப்பிப்பதிலிருந்து அதனை கௌரவ ஆளுநரின் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல் வரையும் அதன் பின்னர் கௌரவ ஆளுநரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர் கசெற்றில் பிரசுரித்தல் வரையான பணிகளை ஈடேற்றுதல் வேண்டும்.
ஏனைய அமைச்சுக்களினாலும் நிறுவனங்களினாலும் சமர்ப்பிக்கப்படுகின்ற குறைநிரப்பு மதிப்பீடுகளை சபைக்குச் சமர்ப்பித்தலில் இருந்து ஆளுநரின் அங்கீகாரத்தைப் பெறுதல் வரையான கருமங்களை ஈடேற்றுதல்.
ஒவ்வோராண்டுடனும் தொடர்புடைய வருடாந்த நிதிக்கூற்றுக்களை மாகாணச் சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தலை ஒழுங்கு செய்வதற்கான பணிகள் இந்த அலுவலகத்தினால் ஈடேற்றப்படுகின்றன. அமைச்சுக்களின் முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் செயற்றிட்டங்களை அதற்குச் சமர்ப்பித்து அது தொடர்பான விவாதங்கள் சில தினங்களில் நடைபெறும். இவற்றின் இணைப்பாக்கச் செயற்பாடுகள் இங்கு மேற்கொள்ளப்படும்.
ஒவ்வோராண்டுடனும் தொடர்புடைய வருடாந்த நிதிக்கூற்றுக்களை மாகாணச் சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தலை ஒழுங்கு செய்வதற்கான பணிகள் இந்த அலுவலகத்தினால் ஈடேற்றப்படுகின்றன. அமைச்சுக்களின் முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் செயற்றிட்டங்களை அதற்குச் சமர்ப்பித்து அது தொடர்பான விவாதங்கள் சில தினங்களில் நடைபெறும். இவற்றின் இணைப்பாக்கச் செயற்பாடுகள் இங்கு மேற்கொள்ளப்படும்.
இவ்வலுவலகத்தினால் பின்வரும் பதவிதாங்குநர்களின் அலுவலகங்களைப் பேணிவரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  • கௌரவ தலைவரின் அலுவலகம்
  • கௌரவ பிரதித் தலைவரின் அலுவலகம்
  • கௌரவ எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம்
  • கௌரவ சபை முதல்வரின் அலுவலகம்
  • கௌரவ ஆளுங்கட்சி முதற்கோலாசானின் அலுவலகம்

இதற்கு மேலதிகமாக சபை முதல்வர் அலுவலகத்தின் பணியாளர் குழாத்துடன் ஏனைய நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாகாணச் சபையின் கூட்ட மண்டபத்தை பேணிவரும் பணிகளும் மேற்கொள்ளப்hடுகின்றன.

கௌரவ தலைவர், கௌரவ பிரதித் தலைவர், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ சபை முதல்வர், கௌரவ ஆளுங்கட்சி முதற்கோலாசான் ஆகியோர் உள்ளிட்ட மாகாணச் சபை உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை உள்ளிட்ட சிறப்புரிமைகளை வழங்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக கௌரவ மாகாணச் சபை உறுப்பினர்களுக்கான கடன் வசதிகளை வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சபை முதல்வர் அலுவலகத்தின் பணியாளர் குழாம் சம்பளக் கடன் வழங்கும் பணிகளையும் கௌரவ மாகாணச் சபை உறுப்பினர்களின் பிரத்தியேகப் பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்தும் பணிகளையும் ஈடேற்றி வருகின்றனர்.

இதற்கு மேலதிகமாக செயலாளருடன் தொடர்புடைய கணக்குகளைப் பேணி வரும் பணிகளும் ஈடேற்றப்படல் வேண்டும்.

 
டிசெம்பர் 2018
M T W T F S S
26 27 28 29 30 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6